மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்களை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் வழங்கினார்.

கோவை: கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் வழங்கினார். 



மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு 20 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு உடனடித் தீர்வாக ரூ. 1.64 லட்சம் மதிப்பில் உதவி உபகரணங்களை வழங்கினார். 

பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளை சமூக வளர்ச்சியிலும், சம வாய்ப்புகளை அளித்து அவர்களை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்வது மட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தல், மறுவாழ்வு பணிகளை மேற்கொள்ளுதல், சிறப்புக் கல்வி அளித்தல், உதவி உபகரணங்களை வழங்குதல், கல்வி மற்றும் சுயவேலை வாய்ப்பு உள்ளிட்ட பொருளாதார மேம்பாடு அடையச் செய்தல் மற்றும் சமூக பாதுகாப்பு அளித்தல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு முயற்சிகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகின்றது.

அதன்படி, தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் இரண்டு கால்களும் செயல் இழந்தோர்களுக்கு கைகளால் மட்டும் இயக்கக்கூடிய பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் மூன்று சக்கர வண்டி, மடக்கு சக்கர நாற்காலி ஆகியன பயனாளிகளின் தகுதிகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றது. அதுபோலவே, கால்தங்கிகள், செயற்கை கால்கள், ஒளிரும் ஊன்றுகோல்கள், காதொலி கருவிகள், கருப்பு கண்ணாடி, அதிநவீன செயற்கை கை மற்றும் கால், பிரெய்லி கைக்கடிகாரம், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் உள்ளிட்ட உதவி உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றது. 

மேலும், பேச்சுப்பயிற்சி, செவித்திறன் பயிற்சி மற்றும் மதிப்பீடு, கை, கால் பாதிக்கப்பட்ட காது கேளாத நபர்களுக்கு ஆய்வுக்கூட தொழில்நுட்ப பயிற்சி, வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேபாட்டு பயிற்சிகளும் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வருகின்றது. அதுபோலவே, கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், உலியம்பாளையம் பகுதியில் பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளியும், ஆர்.எஸ்.புரம் பகுதியில் காதுகேளாதோர்களுக்கான சிறப்பு பள்ளியும் செயல்பட்டு வருகின்றது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளிகள் அனைவரும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தினை நாடி இத்திட்டங்களைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...