கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

டெல்லி உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கை இனி சுப்ரீம் கோர்ட் விசாரிக்கும் என்றும், வரும் 26-ம் தேதி வரை அவரை கைது செய்யக் கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கை இனி சுப்ரீம் கோர்ட் விசாரிக்கும் என்றும், வரும் 26-ம் தேதி வரை அவரை கைது செய்யக் கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்து விசாரணை நடத்தியது. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு டெல்லி திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே இதே வழக்கில் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறிய அமலாக்கத்துறை கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பியிருந்தது. இதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இடைக்கால நிவாரணம் பெற நீதிபதிகள் அறிவுத்தியதை அடுத்து, அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார்.

டெல்லி கோர்ட்டு மனுவை விசாரித்து வருகிற 20-ந்தேதிவரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது. இன்று இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது கார்த்தி சிதம்பரத்தின் வக்கீல் கபில்சிபல் ஆஜராக முடியாததால் கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.

இதையடுத்து கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை 22-ம் தேதிவரை மேலும் 2 நாட்களுக்கு நீடித்து நீதிபதிகள் எஸ்.முரளிதர், ஐ.எஸ். மேத்தா உத்தரவிட்டனர்.

இதற்கிடையே, டெல்லி உயர் நீதிமன்றத்தின் கைது தடை உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், டெல்லி உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை இனி சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்கும் என தெரிவித்தனர். 

மேலும், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய 26-ம் தேதி வரை தடை விதித்தனர். 

அதே தேதியன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...