குரங்கணி தீ விபத்து : பலி எண்ணிக்கை 13-ஆக உயர்வு

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த கண்ணன் என்பவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது

தேனி: குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த கண்ணன் என்பவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைக்குச் சென்னை மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த 39 பேர் மலையேற்ற பயிற்சிக்கு சென்றனர். அப்போது அங்கு ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மதுரை மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சிகிச்சை பெற்று வந்த இருவர் நேற்று அடுத்தடுத்து உயிரிழந்ததில் பலி எண்ணிக்கை 12 ஆக இருந்தது. இந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவுந்தம்பாடியை சேர்ந்த கண்ணன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, காட்டுத்தீயில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. 

இதற்கிடையே, குரங்கணி காட்டுத்தீ விபத்தில் 12 பேரை அழைத்துச் சென்ற ஈரோட்டைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...