விபத்தை ஏற்படுத்திய நைஜீரியர்களை தாக்கிய திருப்பூர் மக்கள்

திருப்பூர் அருகே இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்று விபத்தை ஏற்படுத்திய நைஜீரியர்களை அப்பகுதி மக்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


திருப்பூர்: திருப்பூர் அருகே இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்று விபத்தை ஏற்படுத்திய நைஜீரியர்களை அப்பகுதி மக்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னலாடை தொழில் நகரமான திருப்பூர் மாவட்டத்தில் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதேபோல், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானோர் பெருமாநல்லூர், ஊத்துகுளி, மங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் தங்கி பின்னலாடை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, நேற்று ஊத்துகுளி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் தனது மனைவியுடன் ஒருவர் சென்றார். அப்போது இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்ற நைஜீரியர்கள் முன்னே சென்றவர் மீது உரசியுள்ளார். இதில் இவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 



இதனைக் கண்ட அப்பகுதியினர் நைஜீரியர்களை சரமாரியாக தாக்கியதோடு, அவர்கள் வைத்திருந்த செல்போனையும் உடைத்தெறிந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துகுளி போலீசார் நைஜிரியர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்றதோடு, பாதிக்கப்பட்டவரிடமும் விசாரணை நடத்தி இரு தரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

நைஜீரியர்களை பொது மக்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...