தமிழ்நாடு வேளாண்மை பல்கலை., பண்ணைத் தொழிலாளர்கள் போராட்டம்

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் பண்ணை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் பண்ணை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 1000-க்கும் மேற்பட்ட பண்ணை தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், வாரத்தில் 5 நாள் வேலை, பி.எப்.வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைப் பண்ணை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.



இதுவரை அரசின் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத நிலையில், வேளாண் பல்கலை கழக வளாகத்தில் பண்ணை தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று பணிகளை புறக்கணித்து, வளாகத்திலேயே ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசும், பல்கலைக்கழக நிர்வாகமும் தங்கள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் தொடர் போராட்டங்களில் ஈடுபட இருப்பதாகவும் பண்ணை தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.



Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...