செயற்கை நூலிழை உற்பத்தியில் கவனம் செலுத்த மத்திய ஜவுளித்துறை ஆணையர் அறிவுறுத்தல்

சர்வதேச அளவில் செயற்கை நூலிழைக்கான தேவை அதிகரித்து வருவதால், அதன் உற்பத்தியை 5 மடங்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக மத்திய ஜவுளித்துறை ஆணையர் கவிதா குப்தா தெரிவித்துள்ளார்.

கோவை : சர்வதேச அளவில் செயற்கை நூலிழைக்கான தேவை அதிகரித்து வருவதால், அதன் உற்பத்தியை 5 மடங்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக மத்திய ஜவுளித்துறை ஆணையர் கவிதா குப்தா தெரிவித்துள்ளார்.

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட செயற்கை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி கழகத்தின் மண்டல அலுவலகம் கோவை தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க கட்டிடத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்த பின் மத்திய ஜவுளித்துறை ஆணையர் கவிதா குப்தா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :- உள்நாட்டு உற்பத்தி 110 பில்லியன் டாலர், சர்வதேச உற்பத்தி 40 பில்லியன் டாலர் என ஏற்றுமதியில் 150 பில்லியன் டாலர் அளவிற்கு ஜவுளித்துறை வரத்தகத்தில் இந்தியா பங்கு வகித்து வருகிறது. இந்த நிலையில், 2025-க்குள் 300 பில்லியன் டாலர் என்ற அளவிற்கு எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

உலக அளவில் 70% செயற்கை நூல், 30% பருத்தி தேவை என்ற நிலையில், இந்தியாவில் 30% பருத்தி, 70% செயற்கை நூல் என்று முற்றிலுமாக மாறுபட்டவையாக உள்ளதால், சர்வதேச சந்தையில் இந்தியா போட்டியிடுவதற்கு சிக்கலாக உள்ளது. எனவே, தற்போது இந்தியாவில் பருத்தி 6.5 பில்லியன் கிலோ என்ற அளவிலும், செயற்கை நூல் 2.5 பில்லியன் கிலோவாக இருக்கும் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலக அளவில் இந்திய பருத்தி அரசனாக பார்க்கப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளில் ஜவுளித்துறையில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 

புல்லட் ப்ரூப் போன்ற தொழில்நுட்ப ரீதியான ஆடைகளுக்கு எதிர்கால தேவை அதிகமாக இருப்பதால் அது சார்ந்த உடைகளை தயாரிப்பதில் ஜவுளித்துறையினர் கவனம் செலுத்த வேண்டும். வங்கதேசம் நாட்டிலிருந்து தரமற்ற ஆடைகள் இந்தியாவில் நுழைவதை தடுக்க ஆவணங்கள் சரிபார்ப்பு உள்ளிட்ட நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. கோவையில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி கழகத்தின் மண்டல அலுவலகம் தமிழகத்தில் செயற்கை சார்ந்த ஆடைகளை அதிகரிக்க உதவும். இவ்வாறு கூறினார். 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...