தினகரன் அணியில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத் அரசியலில் இருந்தும் ஓய்வு

டிடிவி தினகரன் அணியில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்துள்ள நாஞ்சில் சம்பத், அரசியலில் இருந்து விலகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் அணியில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்துள்ள நாஞ்சில் சம்பத், அரசியலில் இருந்து விலகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான நாஞ்சில் சம்பத், ம.தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தபோது அவருக்கு கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியை ஜெயலலிதா வழங்கினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பிளவுபட்டபோது, சசிகலா அணியில் நாஞ்சில் சம்பத் செயல்பட்டு வந்தார். சசிகலா தலைமையிலான அ.தி.மு.க. அம்மா அணியை டி.டி.வி. தினகரன் வழிநடத்தியபோது அவருக்கு ஆதரவாக நாஞ்சில் சம்பத் பொது மேடைகளிலும், விவாத நிகழ்ச்சிகளிலும் வலுவாக குரல் கொடுத்து வந்தார். 

தற்போது டி.டி.வி. தினகரன் புதிதாக அரசியல் அமைப்பை தொடங்கி உள்ள நிலையில், நாஞ்சில் சம்பத் திடீரென தினகரன் அணியில் இருந்து விலகி உள்ளார். 

இதுபற்றி அவர் கூறியதாவது:- அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அண்ணா, திராவிடம் என்பதை தவிர்த்து விட்டு என்னால் பேச முடியாது. அண்ணாவையும், திராவிடத்தையும் அலட்சியப்படுத்தி விட்டு கட்சி நடத்தலாம் என டி.டி.வி. தினகரன் நம்புகிறார். அவரது நம்பிக்கை வெற்றி பெற வாழ்த்துக்கள். ஆனால், அதில் நான் இல்லை. இனிமேல் நான் எந்த அரசியலிலும் இல்லை. டி.டி.வி. தினகரனின் அநியாயத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதற்காக அவருக்கு எதிர்வினையாற்ற மாட்டேன். அரசியல் தமிழில் இனி அடைபட்டு கிடக்க மாட்டேன். இனி தமிழ் இலக்கிய மேடைகளில் என்னை பார்க்கலாம். என்றார். 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...