பவானி ஆற்றில் இருந்து கோவைக்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு : போராட்டம் நடத்திய இளைஞர்கள் கைது

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் பவானியாற்றில் இருந்து கோவைக்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை: ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் பவானியாற்றில் இருந்து கோவைக்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ஓடும் பவானி ஆற்றில் இருந்து ஏற்கனவே திருப்பூர் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ள ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் கோவை இணைக்கப்பட்டுள்ள காரணத்தினால், கோவை மாநகரில் தடையற்ற குடிநீர் வழங்கும் வகையில் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து மூன்றாம் கூட்டு குடிநீர் திட்டம் என்ற பெயரில் பெரும் குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து செல்லும் ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன. 



ஏற்கனவே, பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பில்லூர் அணையில் கோவைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் கோவை மாநகருக்கு இங்குள்ள ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்தால் ஆற்றுநீர் வற்றி மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என அப்பகுதியினர் தெரிவித்தனர். எனவே, அரசு உடனடியாக இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் இன்று காலை முதல் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கப் போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, முறையான அனுமதியின்றி போராட்டத்தை நடத்த வந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...