ரூ. 75 கோடியில் நொய்யல் ஆற்றை தூய்மைப்படுத்த நடவடிக்கை : அமைச்சர் கருப்பண்ணன் உறுதி

ரூ. 75 கோடி செலவில் நொய்யல் ஆற்றின் இருபுறமும் தூய்மைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திருப்பூரில் அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : ரூ. 75 கோடி செலவில் நொய்யல் ஆற்றின் இருபுறமும் தூய்மைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திருப்பூரில் அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். 

கடந்த சில ஆண்டுகளாக திருப்பூர் சாயக்கழிவு ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதால், பொதுமக்களுக்கும், விவசாயத்திற்கும் நொய்யலாற்று நீர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளுக்குப் பிறகு, கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருப்பூர் மாவட்ட தொழில்துறை சார்பாக திருப்பூர் மாநகருக்குள் செல்லும் நொய்யல் நதியின் கரைகள் சுத்தப்படுத்தப்பட்டன. இந்நிலையில், நொய்யலாற்றை சீரமைப்பதற்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் தலைமையில் நடைபெற்றது. 



ஆய்வுக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கருப்பண்ணன் பேசியதாவது :- திருப்பூர் மாவட்டம் முழுவதும் செல்லக்கூடிய நொய்யலாற்றின் கரைகளைச் சுத்தப்படுத்தி, சாய சலவை கழிவுநீர் நொய்யலாற்றில் கலக்காதவாறு பலப்படுத்தப்படும். அதற்கான இடங்களை ஆய்வு செய்து செயல்திட்டம் வடிவமைக்கப்பட்டு, முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே அறிவிக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவித்தார். 

இதைத்தொடர்ந்து, கடந்த 2 தினங்களுக்கு முன் நொய்யலாற்றில் நுரையுடன் மழை நீர் ஓடியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு முறையான பதிலளிக்காத அமைச்சர் கருப்பண்ணன், அதுபற்றி பிறகு பேசிக்கொள்ளலாம். நான் ஒன்று சொன்னால் நீங்கள் ஒன்று திரித்து வெளியிடுகிறீர்கள், என்றார். மேலும், ஆந்திர முதலமைச்சர் தமிழகத்தை போல எங்களை நினைத்து விடாதீர் என்ற கருத்துக்கு தமிழகம் அமைதியாகவும், சுத்தமாகவும் இருப்பதாகவும் அவர் கூறினார். 

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...