சுல்தான் பேட்டையில் புதிய காவல் நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை சுல்தான் பேட்டை பகுதியில் புதிய காவல் நிலையத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று திறந்து வைத்தார்.

கோவை: கோவை சுல்தான் பேட்டை பகுதியில் புதிய காவல் நிலையத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி உட்கோட்டத்திற்குட்பட்ட சுல்தான் பேட்டையில் புதிய காவல் நிலையத் திறப்பு விழா இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் முன்னிலையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு புதிய காவல் நிலையத்தை திறந்து வைத்தார். 

தொடர்ந்து அவர் பேசுகையில், "இன்று தொடங்கப்பட்டுள்ள இக்காவல் நிலையத்திற்கு 2 சார் ஆய்வாளர்கள், 2 தலைமைக் காவலர்கள், 4 கிரேடு 1 காவலர்கள், 22 கிரேடு 2 காவலர்கள் என 30 காவலர்கள் பணியாற்ற உள்ளனர். பாப்பம்பட்டி, கள்ளப்பாளையம், செலகரச்சல், இடையர்பாளையம், போகம்பட்டி, வடவள்ளி, வாரப்பட்டி, மலைப்பாளையாம், எஸ்.குமாரபாளையம், பூராண்டம்பாளையம் ஆகிய 10 ஊராட்சிகளிலுள்ள 25 குக்கிராமங்கள் இக்காவல் நிலைய எல்லைக்குள் அடங்கும். இங்கு பணியாற்றும் காவலர்கள் தீர்வு நோக்கி வரும் மக்களை இன்முகத்துடன் விசாரித்து கனிவுடன் நடத்த வேண்டும்." என்று அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணகராஜ், மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் பாரி, கோவை சரக காவல் துணைத் தலைவர் கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.பா.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...