என்.ஐ.ஏ. பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது - மனித உரிமைகள் அமைப்பு

சசிகுமார் கொலை வழக்கில் தொடர்புடையவர்களின் வீடுகளில் தேசிய பாதுகாப்பு முகாமை அதிகாரிகள் சோதனை செய்தது [பழிவாங்கும் நோக்குடையது என்று மனித உரிமைகள் அமைப்பின் தேசிய கூட்டமைப்பு பொறுப்பாளர் வழக்கறிஞர் மோகன் தெரிவித்தார்.

கோவை: சசிகுமார் கொலை வழக்கில் தொடர்புடையவர்களின் வீடுகளில் தேசிய பாதுகாப்பு முகாமை அதிகாரிகள் சோதனை செய்தது [பழிவாங்கும் நோக்குடையது என்று மனித உரிமைகள் அமைப்பின் தேசிய கூட்டமைப்பு பொறுப்பாளர் வழக்கறிஞர் மோகன் தெரிவித்தார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- 



விசாரணையை முடிந்த பிறகும் சசிக்குமார் கொலை வழக்கில் கைதான நான்கு பேரின் வீடுகளில் சோதனை நடத்துவது சட்டவிரோத செயல். தேசிய பாதுகாப்பு முகமையின் மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதால், அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தியுள்ளனர். வழக்கு போடப்பட்டு ஓராண்டுக்கு பின்னர் மத்திய அரசின் தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கைப் பதிவு செய்வதும் சட்ட விரோதமானது. 

தேசிய பாதுகாப்பு முகமை இந்த வழக்கை எடுத்து விசாரிக்க முகாந்திரமே கிடையாது. பி.எப்.ஐ., எஸ்.டி.பி.ஐ., போன்ற சில அமைப்புகளை தடை செய்ய தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பை மத்திய அரசு பயன்படுத்துகிறது. அமைப்பு ரீதியான தொடர்புகள் இருக்கலாம் என்ற உள் நோக்கங்களின் அடிப்படையில் இந்த வழக்கு தேசிய பாதுகாப்பு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

சி.பி.சி.ஐ.டி. இந்த வழக்கை யூகத்தின் அடிப்படையில் பதிவு செய்து விசாரித்து வந்ததது. சி.பி.சி.ஐ.டி விசாரணையை முடித்த பின்னர் சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டம் (UAPA) அதில் சேர்க்கப்பட்டது ஏற்புடையதல்ல. எச்.ராஜாவின் பேச்சு இறையாண்மைக்கு எதிராக தெரியவில்லையா? அவர் மீது ஏன் சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தில் மத்திய அரசு ஏன் வழக்கு பதியவில்லை?" என்றார். 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...