மின்சாரம் தாக்கியதில் பள்ளி மாணவர் பலி: விளையாடும் போது நேர்ந்த சோகம்

கோவையில் தனியார் குடியிருப்புக்குச் சொந்தமான மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததில் ஒரு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை: கோவையில் தனியார் குடியிருப்புக்குச் சொந்தமான மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததில் ஒரு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

கோவை உப்பிலிபாளையத்தை அடுத்த ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் ஆர்.ஆர்.தர்ஷன் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் சுமார் 110 குடியிருப்புகள் உள்ளது. அந்த குடியிருப்பில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியம். இவரது மகன் நரேன் கார்த்திகேயன். அதே குடியிருப்பில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவரது மகன் விஷால். 

இந்த இரு பள்ளி மாணவர்களும் நேற்று இரவு குடியிருப்பு வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சுமார் 8 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, பந்து மைதானத்தின் ஓரத்தில் சென்றது. அதனை எடுக்கச் சென்ற விஷால் தவறுதலாக அங்கிருந்த மின் கம்பத்தை தொட்ட போது மின்சாரம் தாக்கியது. விஷாலின் அலறல் சத்தத்தை கேட்ட நரேன், அவரைக் காப்பாற்ற முயன்றார். அப்போது இருவரையும் மின்சாரம் தாக்கியது.

இதையடுத்து, அங்கு சென்ற குடியிருப்பு வளாக காவலாளி மின்சாரத்தை துண்டித்தார். மேலும், இது குறித்து இருவர் வீட்டிற்கும் தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு சென்ற சிறுவர்களின் பெற்றோர்கள் அவர்களை மீட்டு பீளமேடு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 



அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நரேன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஆபத்தான நிலையில் விஷாலுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பீளமேடு போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, அங்கிருந்த மின் கம்பத்தில் மின்கசிவு இருந்ததும் கம்பத்தை சிறுவர்கள் தெரியாமல் பிடித்த போது மின்சாரம் தாக்கியதும் தெரியவந்தது.

அக்கம்பத்தில் மின் கம்பத்தில் மின் கசிவு இருப்பதாக முன்னதாகவே குடியிருப்பு வளாகத்தின் உரிமையாளர் மற்றும் பராமரிப்பாளர்களிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அக்குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டிய நிலையில், வளாக உரிமையாளரான வர்ணாபூபதி என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...