மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது ஆந்திர அரசு

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆந்திராவில் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் முடிவு செய்துள்ளது.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆந்திராவில் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் முடிவு செய்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற மற்றும் ஆந்திர சட்டமன்ற தேர்தலின் போது ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசமும், பா.ஜனதாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணிக்கு கணிசமான வெற்றியும் கிடைத்தது. ஆந்திர மாநிலம் ஆந்திரா, தெலுங்கானா என்று இரு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு தலைநகரான ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்துக்குச் சென்றுவிட்டது.

இதனால் புதிய தலைநகரை நிர்மாணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தள்ளப்பட்டார். மேலும் ஆந்திராவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் தனது மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கவேண்டும் என்றும் புதிய தலைநகராக அமராவதிவை கட்டுவதற்கு கூடுதல் நிதி வழங்கவேண்டும் என்றும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார். ஆனால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த தெலுங்கு தேசம், பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகியது.

இந்த நிலையில், மத்திய அரசுக்கு எதிராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை இந்தத் தீர்மானம் கொண்டு வர முயற்சி நடந்தபோது அவையில் கூச்சல், குழப்பம் நிலவியதால் அது கைவிடப்பட்டது.

மக்களவையில் தற்போது 539 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் ஆளும் பா.ஜ.க.,வுக்கு மட்டும் 274 எம்.பி.க்கள் உள்ளனர். இது பெரும்பான்மைக்குத் தேவையான எம்.பி.க்களை விட அதிகமாகும். மேலும், சில கூட்டணிக் கட்சிகளும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும்.

எனவே, நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடையவே வாய்ப்பு உள்ளது. எனினும், தொடக்கத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பா.ஜ.க., இடைத்தேர்தல் தோல்விகளால் ஒரு சில எம்.பி.க்களை இழந்தது. இப்போது, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் இணைந்திருப்பது, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.,வுக்கு பின்னடைவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...