அண்ணா அறிவாலயத்திற்கு சென்றார் கருணாநிதி

அண்ணா அறிவாலயத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று நேற்று இரவு திடீரென வருகை தந்தார்.

சென்னை: அண்ணா அறிவாலயத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று நேற்று இரவு திடீரென வருகை தந்தார்.

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அதேநேரம், கருணாநிதியின் வீடியோ காட்சிகள் அவ்வப்போது ‘வாட்ஸ்-அப்பில்’ வெளியாகும். அண்மையில் கருணாநிதி தன் கொள்ளுப் பேரனுடன் கிரிக்கெட் விளையாடுவது போன்ற வீடியோ காட்சி ‘வாட்ஸ் அப்பில்’ வெளியானது.

இந்தநிலையில், கருணாநிதி நேற்று இரவு திடீரென அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்தார்.

கோபாலபுரம் வீட்டில் இருந்து புறப்பட்டு, நேற்று இரவு 8.40 மணிக்கு அறிவாலயத்துக்கு தன்னுடைய காரில் கருணாநிதி வந்தார். அப்போது, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட பலர் அவரை வரவேற்றனர்.

அறிவாலயத்தில் உள்ள தன்னுடைய அறைக்குச் சென்ற அவர், அங்கு 10 நிமிடம் இருந்தார். தன் அறையைச் சுற்றிப்பார்த்து, உற்சாகம் அடைந்த கருணாநிதி, பின்னர் அங்கிருந்து, புறப்பட்டு வீட்டிற்குச் சென்றார். ஏற்கனவே 3 மாதங்களுக்கு முன்பு கருணாநிதி, அறிவாலயத்துக்கு வந்து சென்றார். அதன் பின்னர், நேற்று மீண்டும் அவர் அறிவாலயம் வந்து சென்றுள்து குறிப்பிடத்தக்கது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...