நெறி சார்ந்த தமிழ்நாட்டுக்காக என்னை அர்ப்பணிக்கப் போகிறேன் - நாஞ்சில் சம்பத்

நெறி சார்ந்த தமிழ்நாட்டை உருவாக்கும் ஒரு வேள்வி பணிக்கு தன்னை அர்ப்பணிக்கப் போவதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்

திருப்பூர் : நெறி சார்ந்த தமிழ்நாட்டை உருவாக்கும் ஒரு வேள்வி பணிக்கு தன்னை அர்ப்பணிக்கப் போவதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். 

திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க.வின் முன்னாள் நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இன்று திருப்பூர் சென்றார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- 

அவமானங்களையும், ஆபத்துகளையும் தந்து கொண்டிருந்த பொது வாழ்வில் இருந்து விலகிவிட்டேன். தினகரனுக்கு எதிராக எந்த எதிர்வினையும் ஆற்றப் போவதில்லை. அண்ணாவும், திராவிடமும் இல்லாத இடத்தில் எனக்கு இனி வேலை இல்லை என்று துண்டை உதறி தோளில் போடுவதைப் போல் வந்து விட்டேன்.

 

இனி எந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை. இலக்கியங்களை அடுத்த தலைமுறைக்கு சென்று சேர்க்கும் வகையில் இனி என் பணிகள் தொடரும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தாழ்வு மனப்பான்மையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதனை தீர்க்கும் வகையில் நெறி சார்ந்த தமிழ்நாட்டை உருவாக்கும் ஒரு வேள்வி பணிக்கு என்னை அர்ப்பணிக்கப் போகிறேன். ராகுல்காந்தி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசும் கருத்தை தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காவிரி மேலாண்மை விசயத்தில் தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியதும், அதே போன்று அ.தி.மு.க., தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் போராட்டம் நடத்துவதும் வரவேற்கத்தக்கது. 

குறிப்பிட்ட கால கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், தமிழக முதலமைச்சர் அனைத்துக் கட்சி தலைவர்களையும் அழைத்துச் சென்று பிரதமர் வீட்டின் முன்பாக சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி தீர்வு காண வேண்டும். தினகரனின் எதிர்கால செயல்பாடுகள் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...