சூலூர் அருகே விபத்து: இருவர் பலி

சூலூர் அருகே இன்று மினி ஆட்டோவும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கோவை: சூலூர் அருகே இன்று மினி ஆட்டோவும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்ராஜா(26). கோவையிலிருந்நு சமையல் பாத்திரங்களை ஏற்றிக்கொண்டு திருச்சியை நோக்கி மினி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அந்த வாகனத்தில் கார்த்திக் (21), பிவிக்குமார்(18) ஆகிய இருவரும் இருந்தனர். 



இதே போல், ராஜகிருஷ்ணன் என்பவர் சூலூரிலிருந்து லாரியை ஓட்டி வந்தார். இந்த லாரி ரங்கநாதபுரம் அருகே வந்த எதிரே வந்த மினி ஆட்டோவும் மீது பயங்கரமாக மோதியது. இதில் மினி ஆட்டோவும்-வில் வந்த கார்த்திக்ராஜா, கார்த்தி ஆகிய இரண்டு பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பிவிக்குமார் கழுத்தில் காயம்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். லாரியை ஓட்டி வந்த ராஜகிருஷ்ணன் என்பவர் தப்பியோடினார். 

இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக கோவை-திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...