கனிமொழி, ஆ. ராசா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு

2ஜி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.

2ஜி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. 

கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகித்தது தி.மு.க. அப்போது, தொலைத்தொடர்பு துறை அமைச்சராகப் பதவி வகித்த தி.மு.க.வின் ஆ.ராசா 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில், 2008 ஆம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை விற்பனை செய்ய உத்தரவிட்டார் எனவும், இதன் காரணமாக ரூ. 1.76 லட்சம் கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திவிட்டதாக மத்திய கணக்காயம் தெரிவித்தது.

தி.மு.க.வின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் தி.மு.க., நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட முக்கிய நபர்கள் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டனர். இதற்கிடையே, கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் டெல்லி சிறப்பு சி.பி.ஐ., நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்தது. கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி 2ஜி அலைக்கற்றை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றத்தினை நிரூபிக்க அரசு தரப்பு முயலாததால், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தற்போது 2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது இந்திய அரசியல் வட்டாரத்தைப் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது. 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...