பொய்யான தகவலை கூறினால் மானநஷ்ட வழக்கு: ஓ.பி.எஸ்., க்கு எச்சரிக்கை

அண்ணா தொழிற்சங்கத்தில் கையாடல் செய்ததாக பொய்யான தகவலை கூறினால் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன் என அண்ணா தொழிற்சங்க பேரவையின் முன்னாள் செயலாளர் சின்னசாமி தெரிவித்தார்.

கோவை: அண்ணா தொழிற்சங்கத்தில் கையாடல் செய்ததாக பொய்யான தகவலை கூறினால் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன் என அண்ணா தொழிற்சங்க பேரவையின் முன்னாள் செயலாளர் சின்னசாமி தெரிவித்தார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது அவர் கூறுகையில், "அண்ணா தொழிற்சங்கத்தை வளர்த்த என்னை எந்தவித காரணமும் இல்லாமல் தொழிற்சங்க பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளனர். இந்தியாவிலேயே தொழிற்சங்கத்தில் அதிகளவு பணத்தை சேர்த்த தன் மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்கின்றனர். அண்ணா தொழிற்சங்கத்தில் தான் பத்து லட்சம் கையாடல் செய்ததாகத் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்ம் விளக்கம் அளித்துள்ளார். பத்து லட்சம் செலவு செய்ததற்கான கணக்கு தன்னிடம் உள்ளது. 

முதலமைச்சரின் வாய்மொழி உத்தரவின் பேரிலே பணத்தை சங்கத்திற்காக செலவு செய்தேன். மேலும், நான் ஊழல் செய்ததாகக் கூறினால் ஓ.பி.எஸ் மீது மானநஷ்ட வழக்கு போடுவேன். இவர்களுடன் இனி அ.தி.மு.க.,வில் இருக்கமாட்டேன். விரைவில் அரசியல் தொடர்பாக நல்ல முடிவு எடுப்பேன். 

நல்லவர்கள் யாரும் கட்சியில் இருக்கக் கூடாது என நினைக்கின்றனர். கொத்தடிமைகளாக இருக்க வேண்டும் என இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் கருதுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...