தமிழக ஆளுனர் கோவை வருகை

இன்றிரவு, அவினாசி ரோட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் ஆளுனர், நாளை (செவ்வாய்க்கிழமை) கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

கோவை: தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து இன்று கோவை வந்துள்ளார்.

திருச்சூர் எக்ஸ்பிரஸ் மூலம் கோவை ரயில் நிலையம் வந்தடைந்த ஆளுனரை, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் மற்றும் காவல்துறை அதிகாரிகள், பூங்கொத்து மற்றும் புத்தகங்களை கொடுத்து வரவேற்றனர்.

இன்றிரவு, அவினாசி ரோட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் ஆளுனர், நாளை (செவ்வாய்க்கிழமை) கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். 

குறிப்பாக, நாளை காலை 10 மணிக்கு கோவை குமரகுரு கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தியான மையம் மற்றும் நூலகத்தை திறந்து வைக்கிறார்.

பின்னர் 11 மணியளவில் பீளமேட்டில் உள்ள கே.எம்.சி.எச். மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார். அதன்பின்னர் அவர் சேலம் புறப்பட்டு செல்கிறார்.

தமிழக ஆளுனர் வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...