ரத யாத்திரை விவகாரம்: கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கைது

விஷ்வ இந்து பரிஷத் நடத்தும் ரத யாத்திரை தமிழகத்திற்குள் வர அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: விஷ்வ இந்து பரிஷத் நடத்தும் ரத யாத்திரை தமிழகத்திற்குள் வர அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

விஸ்வ இந்து பரிஷத் சார்பில் 'ராம ராஜ்ய ரத யாத்திரை' அயோத்தியில் தொடங்கி 5 மாநிலங்களைக் கடந்து இன்று தமிழகம் வருகிறது. இந்த யாத்திரை தமிழகத்திற்குள் வரக்கூடாது என்று வலியுறுத்தி பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை உக்கடம் பகுதியில் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உக்கடம் காவல் நிலையம் எதிரே நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில் நுற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத யாத்திரைக்கு அனுமதியளித்த மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து, அங்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.



இந்த போராட்டத்தால் பரபரப்பாக காணப்படும் உக்கடம் சாலையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இதே போல், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து ஊட்டி செல்லும் நெடுஞ்சாலையில் எஸ்.டி.பி.ஜ கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு ரத யாத்திரைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, அங்கு சென்ற போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.



Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...