சிறையில் இருந்து 15 நாட்கள் பரோலில் வெளியே வந்தார் சசிகலா

கணவர் நடராஜனின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா 15 நாட்கள் பரோலில் வெளியே வந்தார்.

கணவர் நடராஜனின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா 15 நாட்கள் பரோலில் வெளியே வந்தார். 

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கணவர் ம. நடராஜன் உயிரிழந்ததையடுத்து, சசிகலா தரப்பில் பரோல் கோரி விண்ணப்பிக்கப்பட்டது. அதற்கான பணிகளை சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் மேற்கொண்டனர். கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக 15 நாட்கள் பரோலில் விடுவிக்க வேண்டும் என பெங்களூரு சிறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, 15 நாட்கள் பரோல் வழங்கி சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. 

இதைத்தொடர்ந்து, சிறையில் இருந்து வெளியே வந்த அவர், பெங்களூருவில் இருந்து சாலை மார்க்கமாக தஞ்சாவூர் செல்கிறார். அங்கு தனது கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார். பின்னர், 16 நாள் காரியங்கள் முடிவடைந்த பின்னர், சசிகலா மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார். 

கடந்த முறை சசிகலா பரோலில் வந்த போது, விதிக்கப்பட்ட நிபந்தனைகளே இந்த முறையும் விதிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...