2ஜி மேல்முறையீட்டு வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்

2ஜி மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2ஜி மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவை தொடர்ந்த வழக்குகளில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 19 பேரை விடுதலை செய்து கடந்த டிசம்பர் 21-ந்தேதி சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை சார்பில் நேற்றுமுன்தினம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, சி.பி.ஐ. சார்பில் நேற்று மேல்முறையீடு செய்யப்பட்டது. தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல், நீதிபதி சி.ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இதைத் தெரிவித்தார். 

இதையடுத்து, இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு தொடர்பாக ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 19 பேருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...