டி.ஜி.பி. அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற இரு ஆயுதப்படை காவலர்கள்

சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை : சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



சென்னை கடற்கரை சாலையில் உள்ள காவல்துறை தலைமை அலுவலக வளாகத்தின் வெளியே இன்று மாலை தேனி மாவட்ட ஆயுதப்படையில் காவலர்களாக உள்ள ரகு, கணேஷ் ஆகியோர் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்ய முயன்றனர். இதனைக் கண்ட அங்கிருந்த சக காவலர்கள் அவர்களை தடுத்து அலுவலகத்தின் உள்ளே அழைத்துச் சென்றனர். தேனியில் காவல் உயரதிகாரிகள் சாதி ரீதியாக பணி ஒதுக்கீடு செய்வதாக குற்றம் சாட்டிய அவர்கள், எங்கள் மீது எந்த தவறும் இல்லாத நிலையில், இடமாற்றம் செய்கின்றனர். சாதிரீதியாக தங்களை ராமநாதபுரத்திற்கு இடமாற்றம் செய்கின்றனர் என அடுக்கடுக்காக புகார் கூறினர்.

இது தொடர்பாக புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவில் தலைமை காவலராக இருக்கும் சபீரா பானு என்பவர் இன்று விஷம் அருந்திவிட்டு காவல்நிலையத்தில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

காவலர்கள் தற்கொலை தொடர்பாக சட்டசபையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போலீசாரின் மன அழுத்தத்தைப் போக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்த நிலையில், இன்று ஒரே நாளில் இரண்டு தற்கொலை முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழகத்தில் இதுபோன்ற அடுத்தடுத்து காவலர்களின் தற்கொலை முயற்சிகள் மற்றும் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. 

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...