இளம்பெண்ணைத் தாக்கி நகை பறித்த வாலிபர் காவல்துறையிடம் ஒப்படைப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் இளம்பெண்ணைத் தாக்கி நகையைப் பறித்த வாலிபரை விரட்டிப் பிடித்த பொதுமக்கள் அவனை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.


நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் இளம்பெண்ணைத் தாக்கி நகையைப் பறித்த வாலிபரை விரட்டிப் பிடித்த பொதுமக்கள் அவனை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். 



உதகை வண்டிச்சோலை பகுதியில் வசிப்பவர் பிரவினா. இவர் இன்று காலை வண்டிச்சோலை சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கும் போது ஒரு மர்ம நபர் சாலையோரம் இருந்த கல்லை எடுத்து தலையில் தாக்கியுள்ளார். இதில் பிரவினா நிலை குலைந்து கீழே விழுந்தார். 

பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை அந்த நபர் பறித்து கொண்டு ஓடியுள்ளார். அப்போது பிரவினாவின் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிய அந்த நபரைப் பிடித்து உதகை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

தொடர்ந்து அந்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டதில், குன்னூர் ராஜாஜி நகர் பகுதியில் வசிக்கும் அபுதாஹீர் (33) ஆட்டோ ஓட்டுநர் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவனை கைது செய்த காவல்துறையினர், அபுதாஹீருக்கு மேலும் பல கொள்ளை வழக்குகளில் சம்பந்தம் உள்ளதா? என விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...