நரிக்குறவர் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி ஆர்ப்பாட்டம்

நரிக்குறவர் மக்கள் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி கோவை மாவட்ட நரிக்குறவர்கள் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: நரிக்குறவர் மக்கள் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி கோவை மாவட்ட நரிக்குறவர்கள் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தில் நரிக்குறவர் மக்கள் சாலை ஓரங்களில் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அம்மக்கள், தங்களை சாலைகளில் வியாபாரம் செய்ய கூடாது என்று போலீசார் மிரட்டுவதாகவும், தாங்கள் வசித்து வந்த பகுதியில் இருந்து உடனடியாக காலி செய்ய வற்புறுத்துவதாகவும் கூறி சாட்டையால் அடித்தும், கைகளை பிளேடால் கீறியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



இந்த நிலையில், இன்று தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், " எங்கள் இன மக்களை வணிக வளாகங்களில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். நரிக்குறவர் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். மத்திய அரசு அறிவித்த இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க வேண்டும்." என்றனர். 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...