ஜெயலலிதா சிகிச்சையின் போது சி.சி.டி.வி கேமராக்கள் நிறுத்தப்பட்டன : அப்பல்லோ

ஜெயலலிதா சிகிச்சையின் போது மருத்துவமனை சி.சி.டி.வி. கேமராக்கள் செயலிழக்கச் செய்யப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.

ஜெயலலிதா சிகிச்சையின் போது மருத்துவமனை சி.சி.டி.வி. கேமராக்கள் செயலிழக்கச் செய்யப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :- ஜெயலலிதாவை யார் சந்திக்க வேண்டும் என உடன் இருந்தவர்கள் கூறிய நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் சி.சி.டி.வி. நிறுத்தி வைக்கப்பட்டது. வார்டு பாய் முதல் தலைமை மருத்துவர் வரை அனைவரும் ஜெயலலிதாவை சிறப்பாக கவனித்தனர்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிறப்பான சிகிச்சையால் விரைவாக குணமடைந்து வந்தார். ஜெயலலிதா உடல்நலம் தேறி வருவதாக நாங்கள் நினைத்தோம். உடல்நலம் தேறி வருவதற்கு, அத்தனை சிகிச்சைகளையும் அப்பல்லோ செய்தது. ஒருநாள் சிகிச்சை அல்ல. பல வாரங்கள் சிகிச்சை தொடர்ந்து நடந்தது. எதிர்பாராத சூழலில் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான எல்லா தகவலையும், ஆவணங்களையும் விசாரணை ஆணையத்தில் கொடுத்துள்ளோம். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தர சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. அப்பல்லோ மருத்துவர்கள், வெளிநாட்டு மருத்துவர்களும் சிறப்பான சிகிச்சை அளித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...