பத்மஶ்ரீ நானம்மாளுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவித்த கோவை ரோட்டரி சங்கத்தினர்

மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்மஶ்ரீ விருது' பெற்ற யோகக் கலை பயிற்றுனர் நானம்மாள்-க்கு, கோவை ரோட்டரி சங்கம் சார்பாக 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கி கெளரவிக்கப்பட்டது.

கோவை : மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்மஶ்ரீ விருது' பெற்ற யோகக் கலை பயிற்றுனர் நானம்மாள்-க்கு, கோவை ரோட்டரி சங்கம் சார்பாக 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கி கெளரவிக்கப்பட்டது.



அவினாசி ரோட்டில் அமைந்துள்ள சேம்பர்ஸ் டவர் வளாகத்தில், இன்று (வியாழக்கிழமை) மாலை விருது வழங்கும் விழா நடைபெற்றது.

கோவை ரோட்டரி சங்கம் சார்பாக தலைவர் சாண்டியாகோ ஜேசு, செயலாளர் ஜ்யோதீஷ் பிள்ளை மற்றும் சிறப்பு வருந்தினர் K.S.பிள்ளை ஆகியோர் 'வாழ்நாள் சாதனையாளர் விருதை' பத்மஶ்ரீ நானம்மாளிடம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் தன் குடும்பனத்தினரோடு கலந்துகொண்ட நானம்மாள், யோக கலையின் நன்மைகள் குறித்து விளக்கினார்.

அவர் பேசுகையில், 'யோக கலை, உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும். அனைவரும் யோகாசனங்கள் செய்து, நோயில்லாத வாழ்வை பெற வேண்டும். கீரை, கம்பு, சிறுதானியம் போன்ற உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். 99 வயதிலும் தளராமல், நான் யோகா செய்வதற்கு, இயற்கை சார்ந்த உணவு பழக்கவழக்கம் தான் காரணம்' என்று கூறினார்.

அத்தோடு, உடலுக்கு வலிமை தரும் சில முக்கியமான யோகாசனங்களையும் மேடையில் செய்துகாட்டி அனைவரையும் அசத்தினார்.

இந்நிகழ்வில் பேசிய கோவை ரோட்டரி சங்கத்தின் தலைவர் சாண்டியாகோ ஜேசு, 'டில்லியில், குடியரசு தலைவர் கைகளால் பத்மஶ்ரீ விருது வாங்கிய பின், நானம்மாள் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுதான். கோவைக்கு பெருமை தேடிதந்த அவரை, ரோட்டரி சங்கம் சார்பாக முதலாவதாக கெளரவித்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம்' என்றார்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...