வறட்சியை எதிர்கொள்வது குறித்து மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்: மாவட்ட கல்வி தலைமை அதிகாரி

பள்ளி மாணவர்களுக்கு வறட்சியை எதிர்கொள்வது குறித்து கற்பிக்க வேண்டும் என மாவட்ட கல்வி தலைமை அதிகாரி பி. அய்யண்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை: பள்ளி மாணவர்களுக்கு வறட்சியை எதிர்கொள்வது குறித்து கற்பிக்க வேண்டும் என மாவட்ட கல்வி தலைமை அதிகாரி பி. அய்யண்ணன் தெரிவித்துள்ளார்.



உலக தண்ணீர் தினத்தையொட்டி உலகளாவிய இயற்கை நிதியம் மற்றும் பள்ளி கல்வித் துறை இணைந்து பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் குழு மற்றும் தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர். இதில், சிறப்பு விருந்தினராக மாவட்ட கல்வி தலைமை அதிகாரி பி. அய்யண்ணன் கலந்து கொண்டார்.



நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :- தற்போது, தண்ணீர் தட்டுப்பாடு உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தரம் வாய்ந்த சர்வதேச நகரங்களும் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனையில் சிக்கி தவித்து வருகின்றன. குறிப்பாக, தென்னாப்ரிக்காவின் கேப்டவுன் நகரில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. அதே நிலை நமது நாட்டில் உள்ள ஒருசில நகரங்களில் ஏற்பட்டுள்ளது. நீர் மேலாண்மை நம்மிடம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்கிறது. தற்போது, அதனை சரிசெய்ய நாம் தவறினால், கேப்டவுன் நகர் மக்களைப் போன்று நாமும் தண்ணீரைத் தேடி அலைய வேண்டிய நிலை ஏற்படும். எனவே, பள்ளிகளில் மாணவர்களுக்கு வறட்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், மாணவர்கள் தங்களது பள்ளியில் பசுமை வளாகத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, உலகளாவிய இயற்கை நிதியத்தின் ஒருங்கிணைப்பாளர் டி. பூமிநாதன் கூறுகையில், "மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீலகிரியில் பாயும் ஆறுகளை நம்பியே கோவை மாநகர் உள்ளது. வனப்பகுதிகள், ஆற்றுப்படுகைகள் மற்றும் சதுப்புநிலங்களை பாதுகாத்து, தண்ணீர் பற்றாக்குறையை போக்குவது பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்", என்றார்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...