தமிழக அரசைக் கண்டித்து நீலகிரி, திருப்பூரில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டம்

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசைக் நீலகிரி மாவட்டம் உதகையில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது.



நீலகிரி: பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசைக் நீலகிரி மாவட்டம் உதகையில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது.



மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசிடம் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக பல்வேறு கட்டப் போராட்டங்களையும் அவர்கள் தொடர்ந்து நடத்தினர். இதனிடையே, ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒருசில வாக்குறுதிகளை அளித்திருந்தது.



இந்த நிலையில், நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஏ.டி.சி., சுதந்திர மைதானம் வரை கண்டனப் பேரணி நடத்தப்பட்டது.



இதனிடையே, தங்களது கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்து அடுத்த மாதம் 8-ம் தேதி, தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், ஊட்டச்சத்து ஊழியர்கள் உள்ளிட்ட பல லட்சக்கணக்கான ஊழியர்களைத் திரட்டி சென்னை கோட்டையை முற்றுகையிடப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதேபோல, திருப்பூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பென்சன் திட்டத்தையே நிறைவேற்ற வேண்டும், 21 மாத கால நிலுவைத்தொகையினை வழங்க வேண்டும், ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் ஊதிய முரண்பாடுகளை தவிர்த்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.



மேலும், தென்னாம்பாளையம் அரசுப் பள்ளியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை கோரிக்கைகளை முழங்கியவாறே பேரணியாகச் சென்றனர். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...