நில மோசடி : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது

கோவை : சட்டவிரோதமாக ஆவணங்களை தயார் செய்து நில மோசடியில் ஈடுபட்டதாக இணை சார்பதிவாளர் அளித்த புகாரின் பேரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை : சட்டவிரோதமாக ஆவணங்களை தயார் செய்து நில மோசடியில் ஈடுபட்டதாக இணை சார்பதிவாளர் அளித்த புகாரின் பேரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

சேலம் அம்மா பேட்டையைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (70). இவரது மனைவி சவிதா(60). இவர்களுக்கு ஆர்.எஸ்.புரம் பகுதியில் 4,840 சதுர அடி பரப்பளவிலான இடம் இருந்தது. இந்த இடத்தை 1997-ல் திலகம், அருண் என்பவருக்கு விற்பனை செய்து விட்டனர். ஆனால், இவர்கள் இந்த விற்ற இடத்தின் ஆவணங்களை போலியாக தயாரித்து பல்வேறு மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில், போலியான கலர் நகலை வைத்து திருப்பூர் குமரன் நகர் பகுதியில் உள்ள கரூர் வைசியா வங்கியில் ரூ. 1.20 கோடி கடன் வாங்கி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டனர்.



பின்னர், பிணையில் வந்த தம்பதியினர் அவர்களது மகனின் உதவியுடன் அடுத்து மீண்டும் மோசடி செய்யத் தொடங்கினர். இதில், திருப்பூரைச் சேர்ந்த பிரசாந்த், சத்தியமங்கலத்தை சேர்ந்த பாக்யராஜ் உள்ளிட்ட பல பேரிடம் போலியான ஒரே பத்திரத்தை வைத்து பல லட்ச ரூபாயைக் கடன் வாங்கி மோசடி செய்துள்ளனர். 



இந்த நிலையில் இடத்தின் உரிமையாளர் அருண், கடந்த ஆண்டு கோவையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் பேரில் விசாரணை செய்த அதிகாரிகள் குற்றம் இருப்பதை உறுதி செய்தனர். அதன்படி, உயர் அதிகாரி ராமசாமி உத்தரவின் பேரில், இணைசார்பதிவாளர் எண்-1 குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்தார். இதனடிப்படையில் குற்றத்தில் ஈடுபட்ட கணவன், மனைவியை கோவை போலீசார் சேலத்தில் இன்று கைது செய்தனர். இந்த மோசடி சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாகக் கூறப்படும் ராஜமாணிக்கத்தின் மகன் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளார். இவரையும் பிடிக்க போலீசார் தீவிரமாகியுள்ளனர்.

இது குறித்து இடத்தின் உரிமையாளர் அருண் கூறியதாவது :- இதுபோன்று ஏமாற்றுபவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்தால், மேலும் மேலும் மோசடிகள் தொடரும். இதுபோன்ற குற்றங்களை தடுக்க டெக்னிக்கல் முறையை பலப்படுத்த வேண்டும். தனி நபரை ஏமாற்றுவதை விட அரசின் நிறுவனங்களையே ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இன்னும் எத்தனை நபர்களை ஏமாற்றியுள்ளார்கள் என்பதை போலீசார் விசாரணை செய்து கண்டுபிடிக்க வேண்டும். மேலும், இதுபோன்ற குற்றங்களை தடுக்க வேண்டும், என்றார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...