காமன்வெல்த்தில் தங்கம் வென்றார் தமிழக வீரர் சதீஷ் குமார்

காமன்வெல்த் போட்டியில் ஆடவர் பளு தூக்குதலில் தமிழகத்தை சேர்ந்த சதீஷ்குமார் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், பளு தூக்குதலில் இந்தியாவிற்கு 3வது தங்கம் கிடைத்துள்ளது

காமன்வெல்த் போட்டியில் ஆடவர் பளு தூக்குதலில் தமிழகத்தை சேர்ந்த சதீஷ்குமார் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், பளு தூக்குதலில் இந்தியாவிற்கு 3வது தங்கம் கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் காமன்வெல்த் போட்டிகள் நடந்து வருகிறது. இதில், ஆடவர் பளுதூக்குதல் போட்டியில் 77 கிலோ எடை பிரிவில் தமிழக வீரர் சதீஷ் குமார் கலந்து கொண்டார்.  மொத்தம் 317 கிலோ எடையை தூக்கி இந்தப் போட்டியில் தங்கத்திற்கான மகுடத்தை சூடினார்.

முன்னதாக, மகளிருக்கான பளுதூக்குதலில் 48 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சிகோம் மிராபாய் சானு, 53 கிலோ எடை பிரிவில் சஞ்சிதா சானு தங்கம் வென்றனர். சதீஷ் குமார் தங்கம் வென்றதன் மூலம் இந்தியா, பளுதூக்குதல் போட்டியில்  3-வது தங்கம் வென்றது. இதனையடுத்து, பதக்கப்பட்டியில் 3 தங்கம் ஒரு வெள்ளி ,ஒரு வெண்கல பதக்கங்களுடன் இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 

பதக்கம் வென்ற சதீஷ்குமார் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்தவராவார். பதக்கம் வென்றது குறித்து அவரது பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவர் கடந்த 2014 ம்ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...