சசிகுமார் கொலை வழக்கு: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவருக்கு நோட்டீஸ்

கோவை: சசிகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கட்சி தொடர்பான ஆவணங்கள் இருந்துள்ளதால் பாதுகாப்பு முகமை​ ​அதிகாரிகள் அக்கட்சியின் மாநில தலைவரிடம் விளக்கம் ​கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

கோவை: சசிகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கட்சி தொடர்பான ஆவணங்கள் இருந்துள்ளதால் பாதுகாப்பு முகமை​ ​அதிகாரிகள் அக்கட்சியின் மாநில தலைவரிடம் விளக்கம் ​கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இந்து முன்னணி அமைப்பின் கோவை மாவட்ட செய்தித் தொடர்பாளராக இருந்தவர் சசிகுமார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதியன்று நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை துடியலூர் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

வழக்கு தொடர்பாக முபாரக், அபுதாகிர், சதாம் உசேன், சுபேர் என்ற நான்கு பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். 

இந்த கொலையில் அமைப்பு ரீதியான பின்னணி இருக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது.

வீடுகளில் சோதனை

இந்நிலையில், தேசிய புலனாய்வு துறை, சசிகுமார் கொலை வழக்கில் பல்வேறு விசாரணைகளை நடத்தினர். இதில் கைது செய்யப்பட்ட முபாரக், அபுதாகிர், சதாம் உசேன், சுபேர் ஆகியோரின் வீடுகளில் தேசிய புலனாய்வு துறையினர் சோதனை நடத்தினர். இதில் அபுதாகிர், சுபேர் ஆகியோரின் இல்லங்களில் மூன்று செல் போன்கள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தை தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சோதனையானது சாய்பாபா காலனி, உக்கடம் ஆகிய பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

இந்த சோதனையின் போது பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவிற்கு தொடர்பான ஆவணங்கள் அவர்களின் வீடுகளில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த அமைப்பினர் மாநில தலைவர் முகம்மது இஸ்மாயிலுக்கு என்.ஐ.ஏ சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக, என்.ஐ.ஏ. சார்பில் சுபேர் மற்றும் சதாம் உசைன் ஆகியோர் மீது பூந்தமல்லி சிறப்பு நீதி மன்றத்தில் கடந்த 7-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...