கோவையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்

கோவை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



சமூக நீதி வழக்கறிஞர்கள் மய்யம் சார்பில் கோவை நீதிமன்றம் வளாக முன்புள்ள சாலையிலிருந்து மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். வழக்கறிஞர்கள் கைகோர்த்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கோ பேக் மோடி (Go back modi) , கோ பேக் மோடி என்ற முழக்கங்களை எழுப்பினர்.



மேலும், நியூட்ரினோ, மீத்தேன் ஆகிய திட்டங்களை கைவிட வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டது. மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிறிது நிமிடங்களிலேயே சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் வெண்மணி கூறியதாவது :- மத்திய பா.ஜ.க., அரசு பொறுப்பேற்றது முதல் இன்று வரை தமிழர் விரோதப் போக்கில் செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடி மீது எழுந்துள்ள மக்களின் கோபம் உயர்ந்து கொண்ட செல்கிறது. தமிழர்கள் மீது ஆபத்தான திட்டங்களை கொண்டு வர துடித்து வருகிறது. ஆனால், தேவையான நீரை தர மறுக்கிறது. தற்போது, எழுந்துள்ள கோ பேக் மோடி என்ற வார்த்தை சர்வதேச அளவில் வைரலாகி வருகிறது, என்றார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...