தனி மனைகளை வரைமுறைப்படுத்திக் கொள்ள 2 நாள் முகாம்

கோவை : அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் அமையும் தனி மனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை : அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் அமையும் தனி மனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேட்டுப்பாளையம் நகராட்சி, காரமடை பேரூராட்சி மற்றும் காரமடை ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் வாங்கியுள்ள தனி மனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள ஏற்கனவே விண்ணப்பம் சமர்ப்பித்துள்ள மனுதாரர்களும், இதுவரை விண்ணப்பிக்காத தனித்த மனை உரிமையாளர்களுக்கும் காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வரும் 16 மற்றும் 17 ஆகிய இரு நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க நினைப்பவர்கள் உரிய ஆவணங்களை எடுத்து வர வேண்டும்

மேலும், முகாம் நடக்கும் இடத்திலேயே மனுதாரர்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களை நேரடியாக செலுத்தவும் வசதி செய்யப்படும். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் மனை ஒன்றுக்கு ரூ. 500 பரிசீலனைக் கட்டணமாக (செலுத்தாது இருப்பின்) செலுத்த வேண்டும். நகராட்சி பகுதிகளில் மனைப்பரப்பில் ரூ. 60 ச.மீ. மற்றும் பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் மனைப்பரப்பில் ரூ.30 ச.மீ.-யை வரன்முறைக் கட்டணமாக செலுத்த வேண்டும், நகராட்சி பகுதிகளில் மனைப் பரப்பில் ரூ. 250 ச.மீ., பேரூராட்சி பகுதிகளில் மனைப் பரப்பில் ரூ. 75 ச.மீ. மற்றும் ஊராட்சி பகுதிகளில் மனைப் பரப்பில் ரூ. 25 ச.மீ.-யை அபிவிருத்திக் கட்டணமாக செலுத்த வேண்டும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதியில் ஓடந்துறை மற்றும் சிக்கதாசம்பாளையம் வருவாய்க் கிராமப் பகுதியும், காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் சிக்கதாசம்பாளையம், நெல்லித்துறை, ஓடந்துறை, தேக்கம்பட்டி, தோலம்பாளையம் மற்றும் வெள்ளியங்காடு வருவாய் கிராம பகுதிகள் மலையிடக் கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இப்பகுதிகளுக்கு இந்த முகாம் பொருந்தாது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...