சாலை விரிவாக்கம் செய்ய சிறுவாணி சாலையில் 83 மரங்களை அகற்ற முடிவு

கோவை : கோவை சிறுவாணி சாலையில் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலையில், அங்கு மேற்கொள்ளப்படும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


கோவை : கோவை சிறுவாணி சாலையில் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலையில், அங்கு மேற்கொள்ளப்படும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 



கோவை மாவட்டம் சிறுவாணி சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அந்த வழியாக உள்ள 83 மரங்களை வெட்ட வருவாய்துறையினர் முடிவு செய்திருந்தனர். முன்னதாக, காளம்பாளையம் முதல் இருட்டுப்பள்ளம் வரையில் சாலை விரிவாக்கத்திற்காகப் போக்குவரத்து நெரிசல் இல்லாத இந்த சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரும் 200 மரங்களை வெட்டத் திட்டமிட்டிருந்தனர். முதற்கட்டமாக 7 மீ. சாலையை 10 மீட்டராக அகலப்படுத்துகின்றனர். சாலைகளின் இருபுறமும் தலா 1.5 மீ விரிவாக்கம் செய்யப்படுகிறது. 



அரசின் இந்த திட்டத்திற்கு இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஓசை அமைப்பைச் சேர்ந்த கே. சையத் கூறுகையில்," இந்த சாலை மேற்கு தொடர்ச்சி மலையின் அடிப்பகுதியுடன் நிறைவடைகிறது. இதில், போக்குவரத்தும் அதிகம் காணப்படுவதில்லை. ஏன் இந்த சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது என்பது தெரியவில்லை. விரிவாக்கப் பணிகளால் விலை மதிப்பற்ற மரங்கள் அழிக்கப்படுகின்றன. 83 மரங்கள் வெட்ட திட்டமிட்டதில், 40 மரங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன," இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...