கோடை வெப்பத்தில் விலங்குகள் மற்றும் பறவைகளின் தாகத்தைத் தணிப்பதற்கான குரல்

கோவை: இந்த கோடைக்காலத்தில் வெப்பத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் தண்ணீர் பாட்டில்களை உடன் எடுத்துச் செல்கின்றனர். இந்த காலகட்டத்தில் கூடுதல் நீர் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அதிக வெப்பத்தின் காரணமாக சிறு குட்டைகள் மற்றும் நீராதாரங்கள் வற்றி தெரு நாய்களுக்கும், பறவைகளுக்கும் நீர் கிடைக்காமல் போகிறது. இதனால் வாயில்லா ஜீவன்கள் மிகவும் துன்புறுகின்றன. அதில் சில மடிந்தும் விடுகின்றன.


கோவை: இந்த கோடைக்காலத்தில் வெப்பத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் தண்ணீர் பாட்டில்களை உடன் எடுத்துச் செல்கின்றனர். இந்த காலகட்டத்தில் கூடுதல் நீர் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அதிக வெப்பத்தின் காரணமாக சிறு குட்டைகள் மற்றும் நீராதாரங்கள் வற்றி தெரு நாய்களுக்கும், பறவைகளுக்கும் நீர் கிடைக்காமல் போகிறது. இதனால் வாயில்லா ஜீவன்கள் மிகவும் துன்புறுகின்றன. அதில் சில மடிந்தும் விடுகின்றன. 



இதனைத் தடுக்க பெங்களூரைச் சேர்ந்த ஆர்வலர் சன்னி ஜெயின் 'வாட்டர் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' என்ற பெயரில், சிறு குடுவைகளில் நீரை நிரப்பத் தொடங்கினார். பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட அந்த நீர் ஐந்தறிவு ஜீவன்களுக்கு வாழ்வாதாரமாக அமைந்தது. அதன் அடிப்படையில், கோவையைச் சேர்ந்த ரீனா கோத்ரி என்பவரும் குடுவைகளில் நீரை நிரப்பி வைக்கத் தொடங்கியுள்ளார்.



இது குறித்து அவர் கூறுகையில், "எனது சகோதரர் சன்னி ஒரு விலங்குகள் நல ஆர்வலர். அவர் சிறு குடுவைகளில் நீர் நிரப்பி விலங்குகள் மற்றும் பறவைகளை பாதுகாக்க வழி வகை செய்தார். இந்த திட்டத்தை நாடு முழுவதும் பரப்பவும் அவர் முயற்சிகளை மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக கோவையில் அந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறேன். விலங்குகளால் பேச முடியாது. மனிதர்கள் தான் அவற்றின் தேவையை அறிந்து செயல்பட வேண்டும். இந்த சிறிய உதவி மூலம் அவற்றை நாம் பாதுகாக்கலாம்." என்றார்.



அவர் சிமென்ட் கொண்டு தயாரிக்கப்பட்ட இரு வேறு அளவுகளிலான பானைகளை தயாரித்துள்ளார். அந்த பானைகள் முறையே 3 மற்றும் 6 லிட்டர் தண்ணீரை சேமிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.



அந்த பானைகளை பெற்று நீங்களும் விலங்குகள் மற்றும் பறவைகளை பாதுகாக்க ரீனா கோத்ரி-யை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: 9994117432.



Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...