சாய்ந்த மின் கம்பங்களை ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு சீர் செய்யும் பணி தீவிரம்

கோவை: கோவையில் சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பங்களை ஒப்பந்த தொழிலாளர்கள் சீர்படுத்தி வருகின்றனர்.

கோவை: கோவையில் சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பங்களை ஒப்பந்த தொழிலாளர்கள் சீர்படுத்தி வருகின்றனர்.



கோவை அருகே மதுக்கரை மற்றும் பாலத்துறை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த வாரம் பெய்த கன மழையால் 70-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தன.



இதே போல், சாவடி, கும்மிட்டிபதி, ரங்க சமுத்திரம், மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளிலும் மின் கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தற்போது 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் இரு அணிகளாகப் பிரிந்து சாய்ந்த மின் கம்பங்களை சீர் செய்து வருகின்றனர்.



இது குறித்து ஒப்பந்த தொழிலாளர் ​ஒருவர் ​கூறுகையில், "மின் வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களே இல்லை என அரசுக்கு மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவே எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் மறுக்கப்படுகின்றன. தற்போது ஒப்பந்த பணியாளர்களே இல்லை என்றால் தற்போது, மின் கம்பங்களை உயிரைப் பணயம் வைத்து சீர் அமைத்துக் கொண்டிருப்பது யார்?. நாங்கள் பணிக்கு திரும்பாததால் பல்வேறு பணிகள் கிடப்பில் போடப்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர். மழைக் காலம் நெருங்குவதாலும், எங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று கூறியதாலும் மீண்டும் பணிக்கு திரும்பினோம்." என்றார்.

இது குறித்து மதுக்கரை தாலுகா தெற்கு உதவி செயற் பொறியாளர் உமா பார்வதி கூறுகையில், "கடந்த புதன்கிழமை பெய்த புயல் காற்று மழையால் மின் கம்பங்கள் சாய்ந்தன. தற்போது அதனை சீர் செய்யும் பணியில் அனைத்துத் தரப்பு தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர்." என்றார்.



தமிழகம் முழுவதும் 8,200 மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள், மின்வாரியத்தில் தொடர்ந்து பணிபுரிய ஒப்புதல் வழங்க வேண்டும், தொழிலாளர்களை அடையாளம் கண்டு அடையாள அட்டை வழங்க வேண்டும், ஒப்பந்த பணியாளர்களுக்கு அமைச்சர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் ரூ. 380 வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் மாதம் 3-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் அவர்களது கோரிக்கைகள் மூன்று மாதங்களுக்குள் பரிசீலிக்கப்படும் என தமிழ்நாடு மின்வாரிய தலைமையகம் அறிவித்ததை அடுத்து அவர்கள் மீண்டும் கடந்த திங்கள்கிழமை முதல் பணிக்கு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...