மலை பூண்டின் விலை கடும் வீழ்ச்சி: கிலோ ரூ.10-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலை

கோவை: விளைச்சல் அதிகரிப்பால் நீலகிரி மலை பூண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோவை: விளைச்சல் அதிகரிப்பால் நீலகிரி மலை பூண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மற்ற மாநிலங்களில் விளையும் பூண்டுகளை விட, நீலகிரி மாவட்டத்தில் விளையும் மலை பூண்டிற்கு வரவேற்பு அதிகம். இதில் காரத் தன்மையும், சுவையும் அதிகம் என்பதால் பொதுமக்கள் இதனை விரும்பி வாங்குகின்றனர். அதேபோல், வெளிமாநில விவசாயிகளும் விதைக்காக இதனை வாங்கிச் செல்கின்றனர். நீலகிரி மலை பூண்டிற்கான சந்தை மலை அடிவார பகுதியான மேட்டுப்பாளையத்தில் இயங்கி வருகிறது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் விளையும் அனைத்து பூண்டுகளும் இங்கு கொண்டு வரப்பட்டு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.



ஜனவரி மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை நீலகிரியில் பூண்டு அறுவடை செய்யப்படுகிறது. இந்த சீசனின் தொடக்கத்தில் ஒரு கிலோ பூண்டு ரூ. 100 முதல் ரூ. 150 வரை விற்பனையான நிலையில், தற்போது அதன் விலை கடுமையாக சரிந்து ரூ.10-க்கு விற்பனையாகி வருகிறது. பருவநிலை சரியாக இருந்த காரணத்தினால் கடந்தாண்டை விட இவ்வாண்டு இரண்டு மடங்கிற்கு மேல் விளைச்சல் கிடைத்துள்ளது. இதனால் வரத்து அதிக அளவிலும், தேவை குறைவாகவும் இருப்பதன் காரணமாக விலை சரிந்துள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.



ஆனால், போட்ட கொள்முதலில் பத்து சதவீகிதம் கூட கிடைக்காத காரணத்தால் பூண்டு விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றனர். மேலும், ஒரு மாத காலத்திற்கு இந்நிலை நீடிக்கும் என்பதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...