சிறுவாணி சாலையில் மேலும் 35 மரங்கள் அகற்றும் பணிகள் நிறுத்தம்

கோவை: சாலை விரிவாக்கப் பணிக்காக சிறுவாணி சாலையில் இருந்த மரங்கள் அகற்றுவதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், 35 மரங்களை வெட்டி அகற்றும் திட்டம் கைவிடப்பட்டது.

கோவை: சாலை விரிவாக்கப் பணிக்காக சிறுவாணி சாலையில் இருந்த மரங்கள் அகற்றுவதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், 35 மரங்களை வெட்டி அகற்றும் திட்டம் கைவிடப்பட்டது.

கோவை மாவட்டம் சிறுவாணி சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அந்த வழியாக உள்ள 83 மரங்களை வெட்ட வருவாய்துறையினர் முடிவு செய்திருந்தனர். முன்னதாக, காளம்பாளையம் முதல் இருட்டுப்பள்ளம் வரையில் சாலை விரிவாக்கத்திற்காகப் போக்குவரத்து நெரிசல் இல்லாத இந்த சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரும் 200 மரங்களை வெட்டத் திட்டமிட்டிருந்தனர். முதற்கட்டமாக 7 மீ. சாலையை 10 மீட்டராக அகலப்படுத்துகின்றனர். சாலைகளின் இருபுறமும் தலா 1.5 மீ விரிவாக்கம் செய்யப்படுகிறது.

போக்குவரத்து நெரிசல் இல்லாத இந்த சாலை, அவிநாசி, திருச்சி, பொள்ளாச்சி, பாலக்காடு, சத்தி மற்றும் மேட்டுப்பாளையம் போன்ற முக்கிய சாலைகளையும் இணைப்பதில்லை. எனவே, மரங்களை வெட்டி, சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால், 200 மரங்களை வெட்டத் திட்டமிட்டிருந்த தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் 83 மரங்களை மட்டுமே அகற்ற முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று, மேலும் ஆய்வு நடத்திய நெடுஞ்சாலை அதிகாரிகள், மேலும் 35 மரங்களை வெட்டாமல், சாலையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்த முடிவு, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...