அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் பற்றிய விளம்பரங்கள் கூடாது: பள்ளி கல்வித்துறை

பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் குறித்து விளம்பரங்கள் வெளியிடக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் குறித்து விளம்பரங்கள் வெளியிடக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

10,11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில், பள்ளி கல்வித்துறை இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை இயக்குநர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:- 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாவதை முன்னிட்டு, ரேங்க் முறையைப் பின்பற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்துப் பள்ளிகளுக்கும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தக்க அறிவுரை வழங்க வேண்டும். அரசாணைப்படி செயல்படாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜூன் 1-ந் தேதியே அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும். இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது, இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை கிருமி நாசினி பயன்படுத்தி தூய்மையாக பராமரிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் புதர்கள், கழிவுப் பொருட்கள் இல்லாதவாறு தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

பொதுவிடுமுறை முடிந்து ஜூன் 7-ந்தேதி பள்ளிக்கூடம் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...