கர்நாடகத்தில் பா.ஜ.க., ஆட்சி அமைவதற்கு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் வாழ்த்து

சென்னை: கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க., தலைமையிலான ஆட்சி அமைவதற்கு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

சென்னை: கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க., தலைமையிலான ஆட்சி அமைவதற்கு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்ட மன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 26 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், 107 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பா.ஜ.க., தக்க வைத்துள்ளது.

"கர்நாடக மாநிலத்தில் எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் காவிரி நீர் எந்தத் தடையும் இன்றி தமிழகத்தை வந்தடையும்" என்று தமிழக பா.ஜ.க., தலைவர்கள் கூறி வாத நிலையில், தற்போது அம்மாநிலத்தில் பா.ஜ.க., ஆட்சியமைக்கிறது.

இந்த சூழலில் தமிழக துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க., முன்னிலை வகிப்பதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பெட்டியில் கூறுகையில், "கர்நாடகத்தில் ஆட்சியமைக்கும் பா.ஜ.க.,வுக்கு வாழ்த்துக்கள். காவிரி விவகாரம் தொடர்பாக செயல் வரைவு திட்டம் ஒன்றை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கு செயல் வரைவு திட்டத்தை அளிக்கும் பட்சத்தில், காவிரி நடுவர் மன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பின் படி, காவிரி தமிழகத்திற்கு உறுதியாக வந்தடையும்." என்றார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...