தனியார் தடுப்புகளால் பாதிக்கப்படும் வாகன ஓட்டிகள்: அகற்றாவிட்டால் நடவடிக்கை என போலீசார் எச்சரிக்கை

கோவை: கோவை மாநகர பகுதிகளில் சாலைகள் மற்றும் பொது இடங்களில், வாகனங்கள் நிறுத்த இடையூறாக தனியார் அல்லது வணிகர்கள் தடுப்புகள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித் குமார் எச்சரித்துள்ளார்.

கோவை: கோவை மாநகர பகுதிகளில் சாலைகள் மற்றும் பொது இடங்களில், வாகனங்கள் நிறுத்த இடையூறாக தனியார் அல்லது வணிகர்கள் தடுப்புகள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித் குமார் எச்சரித்துள்ளார்.

டவுன்ஹால், ஆர்.எஸ்.புரம், ராஜ வீதி, தாமஸ் வீதி, காந்திபுரம், பார்க்-கேட், அவினாசி சாலை, ராமநாதபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகள் மாநகரில் மிகுந்த மக்கள் நெருக்கம் உள்ள பகுதியாகும். பொதுமக்கள் பெரும்பாலும் ஆடைகள், நகைகள், வீட்டு உபயோக பொருட்கள் போன்றவற்றை வாங்க இப்பகுதியில் உள்ள கடைகளுக்கு வருவது வழக்கம்.

அப்பகுதிகளில் பல்வேறு அலுவலகங்களும், மருத்துவமனைகளும் இயங்கி வருகின்றன. இதன் காரணமாக, வாகன ஒட்டிகள் சந்திக்கும் பெரும் பிரச்சனை வாகனங்கள் நிறுத்த இடமில்லாமல் தவிப்பது தான். சில நேரங்களில் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

வாகனங்கள் நிறுத்த இடமில்லாமல் இருப்பதற்கு போதிய பார்க்கிங் வசதி இல்லாதது, மல்டிலெவல் பார்க்கிங் சிஸ்டம் இல்லாதது என்று பல காரணங்கள் இருந்தாலும், வணிகர்கள் தங்கள் கடைகள் முன் வாகனங்கள் நிறுத்தாமல் இருக்க தடுப்புகளை வைப்பதும் ஒரு பிரதான காரணமாக கருதப்படுகின்றது.



இது குறித்து மாநகர காவல்துறை துணை ஆணையர் சுஜித்குமார் கூறுகையில், "வாகனங்கள் நிறுத்த இடமில்லாமல் இருக்கும் பொழுது, பொது இடங்களில் தனியார் மற்றும் வணிகர்கள் தடுப்புகளை வைப்பது சரியானது அல்ல. கடை வாசல் முன் மட்டும் தடுப்புகளை சிறியதாக வைத்தால் கூட பரவாயில்லை. ஆனால், கடை முழுவதும் தடுப்புகளை வைத்தால் அது தவறு.



இவ்வாறு தடுப்புகளை வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து வணிகர்களுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் இது தீவிரமாக கண்காணிக்கப்படும்.



தற்போது நிலவி வரும் பார்கிங் பிரச்சினைகளை போக்க ஆர்.எஸ் புரம் பகுதிகளில் 'ஒன் சைடு பார்க்கிங் சிஸ்டம்' செயல்படுத்தப்பட்டுள்ளது. அதே போல் கனரக வாகனங்கள் நகரின் மையப் பகுதிகளுக்கு வராமல் இருக்க பாலக்காடு, கேரளா செல்ல சுங்கம் பகுதியில் உள்ள புற வழிச்சாலையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது." என்றார்.

புதிதாக கட்டப்படும் கட்டிடங்கள் பார்க்கிங் வசதியுடன் கட்டப்படுவதால் வாகனம் நிறுத்த இடம் உள்ளது ஆனால் பழைய கட்டங்களில் இந்த வசதி இல்லை. அதே நேரம் கடை உரிமையாளர்கள் சிலர், தங்கள் கடைக்கு பொருட்கள் வாங்க வந்தால் மட்டுமே கடை முன் உள்ள பொது இடங்களில் வாகனங்கள் நிறுத்த விடுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

இது குறித்து வணிகர் ஒருவர் கூறுகையில், "பழைய கட்டம் என்பதால் வாகன நிறுத்தம் வசதி இல்லை. வாகனங்களை நிறுத்த வருவோரில் சிலர் பல மணி நேரம் வாகனத்தை நிறுத்திவிட்டுச் செல்வதால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சிரமமாக உள்ளது. அதனால் தான் தடுப்புகள் வைக்கப்படுகிறது. வாகன நிறுத்தத்தை முறைப்படுத்த அரசு 'மல்டிலெவல் பார்கிங் சிஸ்டத்தை' செயல்படுத்த வேண்டும்." என்றார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...