தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை: தமிழ் வளர்ச்சிக்காக அமைப்பு வைத்து அரும்பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர் தம் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் 'தமிழ்ச் செம்மல்' என்ற விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

கோவை: தமிழ் வளர்ச்சிக்காக அமைப்பு வைத்து அரும்பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர் தம் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் 'தமிழ்ச் செம்மல்' என்ற விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருது பெறுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகையும் தகுதியுரையும் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

இதுவரை 96 பேர் இந்த விருதினை பெற்றுள்ளனர். நடப்பாண்டிற்கான 'தமிழ்ச் செம்மல்' விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விருது மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் (32 பேருக்கு) வழங்கப்படும். அவ்வறிப்பிற்கிணங்க 2019–ம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு மாவட்டங்களில் தமிழ் வளர்ச்சிக்காகத் தமிழ் அமைப்பு வைத்து அரும்பாடுபடும் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவம் தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

விண்ணப்பிப்பவர்கள் தன்விவரக் குறிப்பு அவற்றுடன் நிழற்படம் இரண்டு, அவர்கள் ஆற்றிய தமிழ்ப்பணி ஆகிய விவரங்களுடன் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகங்களில் வரும் ஜூன் மாதம் 16–ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...