உதகையில் பலத்த மழை: படகு இல்லத்தில் சவாரி ரத்து

நீலகிரி: உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்த காரணத்தால் படகு இல்லத்தில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.


நீலகிரி: உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்த காரணத்தால் படகு இல்லத்தில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.



நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி, கோடநாடு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை முதலே உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெயில் அடித்து வந்தது. ஆனால், பிற்பகல் முதல் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ததது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.



மேலும், பாதாள சாக்கடையில் இருந்து சாலைகளில் கழிவு நீர் வெளியேறியதால் பாதசாரிகள் சிரமத்திற்கு ஆளாகினர். படகு இல்ல சாலை சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக இருப்பதால் மழை நீர் தேங்கி நின்றது. இதனால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். தற்போது பெய்து வரும் மழையால், மலை தோட்ட காய்கறிகள் மற்றும் தேயிலை விவசாயத்தில் ஈட்டுப்பட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



ரத்து

இந்த நிலையில், கோடை விழாவின் ஒரு பகுதியாக இன்று உதகை படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் படகு போட்டிகள் நடைபெறவிருந்தது. கனமழை காரணமாக போட்டிகள் ரத்து செய்யப்பட்டதோடு, படகு சவாரியும் ரத்து செய்யப்பட்டது.



Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...