கோவை மத்திய சிறையில் காவலர்கள் துன்புறுத்துவதாக கைதி ரகளை

கோவை: சிறைக் காவலர்களால் துன்புறுத்தப்படுவதாகக் கூறி கோவை மத்திய சிறை கைதி ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் சட்டையை கழற்றியபடி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: சிறைக் காவலர்களால் துன்புறுத்தப்படுவதாகக் கூறி கோவை மத்திய சிறை கைதி ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் சட்டையை கழற்றியபடி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காந்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் ராஜா (26). கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீதுள்ள அடிதடி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், இன்று கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிக்காக ஆஜர்படுத்தபட்ட சஞ்சய்ராஜா, ஆறாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிறை காவலர்கள் தன்னை சிறையில் துன்புறுத்துவதாக புகார் மனு ஒன்றை அளித்தார். இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் இருந்து கைதி சஞ்சய்ராஜா-வை வெளியில் அழைத்து வந்த போது அவர் சட்டையை கழற்றிவிட்டு ரகளையில் ஈடுபட்டார்.

அப்போது, "கடந்த ஒரு மாதமாக சிறை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், தனிமை சிறையில் அடைத்து நிர்வாணப்படுத்தி துன்புறுத்துகிறார். மேலும், சிறையில் என்னைத் தாக்கியதால் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. எனக்கு மருத்துவ வசதி செய்ய வேண்டும். கோவை சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற வேண்டும்." என்றார்.

ரகளையில் ஈடுபட்ட கைதி சஞ்சய்ராஜா-வை காவல்துறையினர் இழுத்துச் சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அவருக்குப் பின்னால் வேறு வழக்குகளுக்கு வந்த சிறை கைதிகளும் சிறையில் துன்புறுத்தல் நடப்பது உண்மை தான் என்று சத்தம் எழுப்பியவாறு சென்றனர். மேலும், சிறையில் மனித உரிமை மீறல் நடப்பதாகக் கூறி முழக்கம் எழுப்பிச் சென்றதால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...