பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக போபையா நியமனம்

கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், தற்காலிக சபாநாயகராக பா.ஜ.க., எம்.எல்.ஏ., போபையா நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், தற்காலிக சபாநாயகராக பா.ஜ.க., எம்.எல்.ஏ., போபையா நியமிக்கப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளார். இந்த நிலையில், தற்காலிக சபாநாயகரை நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடந்தது. இதனை தொடர்ந்து, விராஜ்பேட்டை தொகுதி பா.ஜ.க., எம்.எல்.ஏ., கே.ஜி. போபையா தற்காலிக சபாநாயகராக நியமித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, போபையா தற்காலிக சபாநாயகராக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

இவர், கடந்த 2009 முதல் 2013 வரை பா.ஜ.க., ஆட்சியின் போது சபாநாயகராக செயல்பட்டார். மேலும், 2010-ல் எடியூரப்பாவிற்கு எதிராக 10 எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி தூக்கிய போது, அவர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டவர் போபையா என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...