எம்.எல்.ஏ.வுடன் பேரம்: காங்கிரஸ் ஆடியோ வெளியிட்டதால் கர்நாடகா அரசியலில் மேலும் பரபரப்பு

கர்நாடகா சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடியூரப்பா நாளை பெரும்பான்மை நிரூபிக்க உள்ள நிலையில், பா.ஜ.க., பிரமுகர் ஒருவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுடன் பேரம் பேசும் தொடர்பான ஆடியோவை வெளியிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடியூரப்பா நாளை பெரும்பான்மை நிரூபிக்க உள்ள நிலையில், பா.ஜ.க., பிரமுகர் ஒருவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுடன் பேரம் பேசும் தொடர்பான ஆடியோவை வெளியிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க.,104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 மற்றும் ம.ஜ.த., 37 தொகுதிகளிலும், சுயேட்சைகள் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க காங்கிரஸ், ம.ஜ.த.வுடன் கூட்டணி அமைத்து முயற்சித்த வேளையில், பா.ஜ.க., வின் எடியூரப்பா முதலமைச்சராகப் பதவியேற்றார். இது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நடந்து வந்தது. இன்றைய விசாரணையில், நாளை (மே-19) சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனால், பெரும்பான்மையை நிரூபித்து பா.ஜ.க., ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளுமா..? அல்லது கூட்டணியால் பெரும்பான்மை பெற்றுள்ள காங்கிரசுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு கிடைக்குமா..? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. இதனிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, தங்களுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக, காங்கிரஸ், ம.ஜ.த., கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பா.ஜ.க., பேரம் பேசுவதாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு, பா.ஜ.க.,வினரும் மறுப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், ராய்ச்சூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் ஜனார்த்தனரெட்டி பேசிய ஆடியோ ஒன்றை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதில், அமைச்சர் பதவி வாங்கித் தருவதாகவும், தேசிய தலைவர்களுடன் நேரடியாக சந்திக்க வைப்பதாகக் கூறப்பட்டுள்ளதாக அந்த ஆடியோவில் உரையாடல் உள்ளது. இந்த ஆடியோ கர்நாடகா அரசியலில் மேலும், புயலை கிளப்பியுள்ளது. இதனிடையே, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஐதராபாத்திலும், ம.ஜ.த., எம்.எல்.ஏ.க்கள் கொச்சியிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...