பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி திட்டங்கள் ரத்து

கோவை : கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நடத்தி வந்த தொலைதூர கல்வி திட்டங்களை ரத்து செய்வது என வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கோவை :  கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நடத்தி வந்த தொலைதூர கல்வி திட்டங்களை ரத்து செய்வது என வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளிலும் தொலைக்தூர கல்வி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் அடிப்படை வசதிகள், முறையான பாட திட்டங்கள் போன்றவை சரியாக நடைபெறவில்லை என கூறி இந்த மையங்களை மூட வேண்டும் என சுய நிதி கலை அறிவியல் கல்லூரி நிர்வாகிகள் சிலர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர்.

இதனிடையே, நேற்று நடைபெற்ற ஆட்சிமன்ற கூடத்தில் தொலைதூரக் கல்வி மையங்களில் இந்த ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடத்துவதில்லை, சுயநிதி கல்லூரிகளின் முதல்வர்களின் ஓய்வு பெறும் வயது ஏற்கனவே முடிவு செய்தபடி தொடரும் என முடிவெடுக்கப்பட்டது.  மேலும், இந்த மையங்களை மூடுவதால் ஏற்படும் வருவாய் இழப்பினை ஈடுகட்ட தனியார் கல்லூரி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரம் தொலைதூரக் கல்வி மையங்களில் படித்து வரும் மாணவர்கள் 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு படிப்புகளை தொடரலாம் என்றும் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...