கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக குமாரசாமி 23-ம் தேதி பதவியேற்பு

பா.ஜ.க., முதலமைச்சர் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஆளுநரின் அழைப்பை ஏற்று கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக குமாரசாமி 23-ந் தேதி பதவி ஏற்கிறார்.

பா.ஜ.க., முதலமைச்சர் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஆளுநரின் அழைப்பை ஏற்று கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக குமாரசாமி 23-ந் தேதி பதவி ஏற்கிறார்.

கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா தனது முதலமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து குமாரசாமியை ராஜ்பவனுக்கு வருமாறு ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். அதன் பேரில் ஆளுநரை குமாரசாமி நேற்று இரவு 7.30 மணிக்கு சந்தித்தார். அப்போது, ஆட்சி அமைக்க வருமாறு குமாரசாமிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதை அவர் ஏற்றுக்கொண்டார். சுமார் அரை மணிநேர சந்திப்புக்கு பின் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வந்த குமாரசாமி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- கர்நாடகத்தில் பா.ஜ.க., அரசு பெரும்பான்மையை நிரூபிக்காததால், அதன் முதலமைச்சர் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி சார்பில் ஆட்சி அமைக்கக் கடந்த 15-ந் தேதி நான் உரிமை கோரினேன். அதன் அடிப்படையில் நேரில் வந்து சந்திக்குமாறு ஆளுநர் எனக்கு அழைப்பு விடுத்தார். அதன் பேரில் ஆளுநரை சந்தித்து பேசினேன். கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க வருமாறு எனக்கு அவர் அழைப்பு விடுத்தார். அதன் அடிப்படையில் பதவி ஏற்பு விழா 23-ந் தேதி (புதன்கிழமை) நடைபெறும்.

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசத்தை ஆளுநர் கொடுத்துள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் தேவை இல்லை. அதற்குள்ளாகவே பெரும்பான்மையை நிரூபிப்போம். இந்தக் கூட்டணி அமையக் காரணமான சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா உள்பட காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். எங்கள் பதவி ஏற்பு விழாவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ், உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர்கள் மாயாவதி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட மாநில கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளோம்.

அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்வது குறித்து காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) இணைந்து ஆட்சி அதிகாரத்தை நடத்த ஏதுவாக ஒரு குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுத்து அதன்படி செயல்படுவோம். இதற்காக ஒரு ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும். இவ்வாறு குமாரசாமி கூறினார்.

அதைத்தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) தலைவர்களின் ஆலோசனை கூட்டம் குலாம்நபிஆசாத் தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் பதவி ஏற்பு விழா, அமைச்சர் பதவிகளை எவ்வாறு பகிர்ந்து கொள்வது, யார்-யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது என்பது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில், குறைந்தபட்ச செயல் திட்டம், ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...