இனி பல்கலைக்கழங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது: தடை விதித்தது யு.ஜி.சி.,

உலக சுற்றுப்புறச் சூழல் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இனி பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


உலக சுற்றுப்புறச் சூழல் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இனி பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலக சுற்றுப்புறச் சூழல் தினம் வரும் 5-ம் தேதி கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி, ஐ.நா., சபை சார்பில் 'பிளாஸ்டிக் மாசுவை அகற்றுவோம்' என்ற கருத்தை முன்னிறுத்தி பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட உள்ளன. இந்த நிலையில், இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழக வளாகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த தடை விதித்து யு.ஜி.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது :- பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பிளாஸ்டிக் டீ கப்கள், உணவு எடுத்துச்செல்லும் பிளாஸ்டிக் கப்கள், பிளாஸ்டிக் பைகள், டிஸ்போசபிள் உணவு பரிமாறும் கப்கள், பிளாஸ்டிக் ஸ்டிராக்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது. இதுதவிர, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது.

பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்துவதைக் குறைக்க இது நல்ல சந்தர்ப்பம். மாணவர்கள் தங்களது அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் விரும்புகிறது, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது தவிர மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பள்ளி வளாகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டைத் தடுக்கவும் பள்ளி நிர்வாகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேபோல, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பிளாஸ்டிக்கை பயன்படுத்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...